News

இலங்கையில் தங்கியிருந்த போது திடீரென காணாமல் போன 22 வயதுடைய பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்த இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டான்

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது திடீரென காணாமல் போன 22 வயதுடைய பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்த இளைஞர், சுமார் 12 மணி நேரத்திற்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் தனது பெற்றோருடன் கடந்த 05ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளார்.

பின்னர் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேக் வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இளைஞர் காணாமற்போனமை தொடர்பில் நாட்டின் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, குறித்த இளைஞர் பம்பலப்பிட்டி காலி வீதியில், வஜிர வீதி சந்திக்கு அருகில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button