இலங்கை–இந்திய ஆடைத் தொழிற் துறை உறவை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வு!

இலங்கை–இந்திய ஆடைத் தொழிற் துறை உறவை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வு!
iKING நிறுவனத் தலைவர் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!
இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான ஆடைத் தொழிற்துறை மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட முக்கியமான ஆடைத் தொழில்துறை ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் சென்னை வர்த்தக மைய கேட்போர்கூடத்தில் (புதன்கிழமை, ஆகஸ்ட் 12ஆம் திகதி) மிக சிறப்பாக நடைபெறற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் முன்னணி ஆடை நிறுவனமான iKING நிறுவனத்தின் தலைவர் இஹ்சான் வாஹிட் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அதேநேரம் இலங்கை முபாரக் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் MSM முபாரக் மற்றும் Front line தலைவர் ரீஷா அஷ்ரப் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்தியாவின் ஆடைத் தொழிற் துறையைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், கைத்தறி மற்றும் ஜவுளித்துறைல் புகழ்பூத்த விஜய் பாலாஜி பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை அலங்கரித்தார்.
அத்துடன், GGMA அமைப்பின் விஜய் புரோஹித், இந்தூர் சங்கத்தின் ஆஷிஷ் நிகாம், DITGMA திருப்பூரின் MKM R. பாலசுப்பிரமணியம், SIGA பெங்களூரின் அனுராக் ஷிங்லா மற்றும் KAKA பெங்களூரின் பிரகாஷ் போஜானி உள்ளிட்ட முக்கிய தொழில்துறை பிரதிநிதிகள் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும், தமிழ்நாட்டின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்களான Pothys, Maharaja, Sumangali, Pacchaiyappas உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இலங்கையின் ஆடை மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் முக்கிய பங்காற்றி வரும் iKING நிறுவன தலைவரின் பங்கேற்பு, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் தொழில்துறை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வின் மூலம் இலங்கை மற்றும் இந்திய ஆடைத் தொழிற் துறையினரிடையே புதிய வர்த்தக வாய்ப்புகள், தொழில்துறை ஒத்துழைப்புகள் மற்றும் பரஸ்பர தொடர்புகளை உருவாக்குவதற்கான புதிய பாதைகள் திறக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
