News

 22 மாதங்களில் 31 லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு பூட்டு – நஷ்டம் காரணமாகவே மூடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 31 சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்க மாதுகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நிலவரப்படி நாடு முழுவதும் 424 சதொச விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றிய போது, சதொச நிறுவனம் 24 பில்லியன் ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக பிரதியமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன சுட்டிக்காட்டினார். அந்நேரத்தில் அந்நிறுவனத்திற்கு 11 பில்லியன் ரூபாய் கடனும் 5 பில்லியன் ரூபாய் வங்கி மேல்அதிகப்பற்றும் (Bank overdraft) இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button