News
நாம் மிகவும் கஷ்டமான ஒரு காலத்தை கடந்து செல்கிறோம். கஷ்டமான காலம் இவ்வளவு நல்லது என்றால் நல்ல காலம் எவ்வாறு இருக்கும் ?
மத்திய கிழக்கு யுத்தத்திற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கினாலும் அது பெரிய விடயம் அமைச்சர் நளீன் ஹேவகே குறிப்பிட்டார்.
மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்..
தற்போது நாம் மிகவும் கஷ்டமான ஒரு காலத்தை கடந்து செல்கிறோம். கஷ்டமான காலம் இவ்வளவு நல்லது என்றால் நல்ல காலம் எவ்வாறு இருக்கும்.
நாம் ஜனாதிபதி , பிரதமர் , ஒரு சிலரைத் தவிர எவரும் அமைச்சு பதவிகளில் இருந்ததில்லை. முன் அனுபவம் இல்லாத நாம் இவ்வாறு நன்றாக செய்கிறோம் என்றால் அனுபவம் கிடைத்தவுடன் எவ்வாறு இருக்கும் என நினைத்து பாருங்கள் என கூறினார்.



