News

2000 ரூபா மாத வாடகையில் 111 பேருக்கு மாதிவலையில் வீடுகள் ..

தற்போதைய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 111 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கோட்டை, மாதிவலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுச் சமுத்தியில் தலா 2,000 ரூபா மாத வாடகை அடிப்படையில் 111 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்துள்ள நாடாளுமன்றத்தின் தகவல் அதிகாரியும் உதவிச் செயலாளர் நாயகமுமான ஹன்ஸ அபயரத்ன, 10-ஆவது நாடாளுமன்றத்தின் 4 அமைச்சர்கள், 9 பிரதியமைச்சர்கள் மற்றும் 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வீடுகளைப் பெற்றுள்ளவர்களில் அடங்குவர் என குறிப்பிட்டுள்ளார்.

மாதிவல வீட்டுச் சமுத்தியில் வீடுகளைப் பெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் மாதாந்த வாடகையாக வெறும் 2000 ரூபா மாத்திரமே அறவிடப்படுகிறது. தற்போது எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தும் வாடகை நிலுவை ஏதும் அறவிடப்பட வேண்டியதில்லை எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் மேலும் உறுதிப்படுத்துகிறது.

அத்துடன், மாதிவல வீட்டுச் சமுத்தி தொடர்பில் 10-ஆவது நாடாளுமன்றத்தின் எந்தவொரு உறுப்பினருக்கும் தனிப்பட்ட வீட்டு வாடகைக் கொடுப்பனவு எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்ட பெயர் பட்டியலின்படி மாதிவலையில் வாடகை வீடுகளைப் பெற்றுள்ள அமைச்சரவை அமைச்சர்கள்: கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்தியாரத்ன, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க ஆகியோர் ஆவர்.

பிரதியமைச்சர்கள்: வசந்த பியதிஸ்ஸ, நலின் ஹேவகே, கமகெதர திஸாநாயக்க, நாமல் சுதர்சன, ஆர்.எம். ஜயவர்தன, ரத்ன கமகே, அருண் ஹேமசந்திர, ரீ.பி. சரத் மற்றும் நாமல் கருணாரத்ன உள்ளிட்ட பல பிரதியமைச்சர்களும் இந்த வீட்டுச் சமுத்தியில் வசிக்கின்றனர்.

இவ்வாறு வீடுகளைப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த எச்.எம். தர்மசேன, சாமர சம்பத் தசநாயக்க, ஜே.டி. அலவத்துவல, காதர் மஸ்தான், சிவஞானம் சிறீதரன், ரோஹண பண்டார, திலீப் வெதஆரச்சி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நலின் பண்டார, ராமநாதன் அர்ச்சுனா, கின்ஸ் நெல்சன், தயாசிறி ஜயசேகர, சானக மெதகொட, ரிஷாட் பதியுதீன், காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், சதுர கலப்பத்தி, ரோஹிணி குமாரி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, பழனி திகாம்பரம், சமிந்த விஜேசிறி, டி.எஸ். ராதாகிருஷ்ணன், இம்ரான் மஹரூப் மற்றும் வருண லியனகே ஆகியோரும் அடங்குவர்.

(மூலம்: ஜனக போகும்புற, Divaina)

Recent Articles

Back to top button