News

சஹ்ரான் ஹஷீம் இந்தியா சென்றுவர ரிஷாட் பதீயுதீன் அரசியல் அனுசரணை வழங்கியுள்ளார்; மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவிப்பு ..

ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி சஹ்ரான் ஹஷீம் இந்தியா சென்றுவர ரிஷாட் பதீயுதீன் அரசியல் அனுசரணை வழங்கியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீதிமன்றில் கருத்து வெளியிட்ட திலீப பீரிஸ்

இரண்டு வர்த்தகர்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒருவர் ரிஷாட் பதீயுதீன். மற்றவர் அலவுதீன். இந்த அலவுதீன் மன்னாரில் வசிக்கும் ஒரு வர்த்தகர். ஷாங்க்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் மாமனார் தான் இவர்.

இந்த அலவுதீன் என்ற வர்த்தகரே இவற்றுக்கு முழு ஆதரவையும் வழங்கியுள்ளார். ரிஷாட் பதீயுதீன் அரசியல் ஆதரவை வழங்கியுள்ளார். தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருந்த இவருடைய மகளைக் கோட்டாபய ஜனாதிபதியானவுடன் பயணத் தடை உத்தரவை நீக்கி விடுவித்துள்ளனர். காரணம், மன்னாரில் கோட்டாபயவின் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பிரதான நிதி உதவியாளராக இருந்தவர் இந்த அலவுதீன் தான்.

அந்தக் குண்டுதாரியின் மனைவியைக் கைது செய்கிறார்கள். தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்துள்ளனர். சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னர் இவர்கள் அதிவேகப் படகுகள் (Speed boats) மூலம் இந்தியாவுக்குச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் படகுகள் இவருடைய வீட்டில் உள்ளன. கடலில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கில்களும் (Jet Ski) அங்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இரானுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் வழங்கிய முன்னாள் கடற்புலி உறுப்பினர் வழங்கிய வாக்குமூலத்த்தை மேற்கோள் காட்டி திலீப பிரிஸ் இதனை கூறியுள்ளார்.

Recent Articles

Back to top button