இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.2% ஆகக் குறைந்தது
செப்டம்பர் 15, 2026
இந்த ஆண்டின் (2026) இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 சதவீதம் வரை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டின் (2025) இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் 5 சதவீதத்தால் வளர்ச்சியடைந்திருந்தது. மேலும் இந்த ஆண்டின் (2026) முதல் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை வெளியீட்டு, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (15) இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2026 இரண்டாம் காலாண்டில் விவசாய நடவடிக்கைகள் 2.3 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் மற்றும் சேவை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் முறையே 7.3 சதவீதம் மற்றும் 2.7 சதவீதம் என்ற அளவில் நேர்மறை (சாதகமான) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஷியாம் நுவன் கணேவத்த



