News

எதிர்வரும் 24 ஆம் திகதி நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு பொலிஸார்  அறிவித்தல் வழங்கியுள்ள நிலையில், ஷிரந்தி ராஜபக்ஷ இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (16) அதிகாலை 1.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியார் (மனைவியின் சகோதரி) ஆன் டி லிவேராவும் அவருடன் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


திடீர் சுகவீனம் காரணமாக நேற்று (15) கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பயணமாகியுள்ளார்.


அவர் விமானத்தில் ஏறச் சென்ற போது, எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு பொலிஸார் அவருக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த மாத இறுதியில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள போதிலும், ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாக நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button