News

அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு வர வலியுறுத்தி, தீபமேந்தி சிறப்பு இறைமன்றாட்ட நிகழ்வு

பாறுக் ஷிஹான்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு வர வலியுறுத்தி, காரைதீவில் சிறப்பு இறைமன்றாட்டம் நிகழ்வு நடைபெற்றது.

“எம் மண்ணின் மைந்தனை மீட்டிட கை கோர்ப்போம் வாரீர்” எனும் உணர்வுப்பூர்வமான அழைப்பின்கீழ், காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் 2001 O/L மற்றும் 2004 A/L (JALU) கல்விப் பிரிவு நண்பர்கள் குழுவினால் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இப் பிரார்த்தனை நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு, அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி அவரை உயிருடன் நாட்டிற்கு மீட்டு வருவதற்குச் சவூதி அரசுக்கும் இலங்கை அரசுக்கும் ஆதரவாகத் தீபமேந்தி இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button