News

புத்தளம் களப்பு பகுதியில் நடத்தப்பட்ட  விசேட தேடுதல் நடவடிக்கையில், 908 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன

புத்தளம் களப்பு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 908 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



நேற்று (22) கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், புத்தளம் கங்கேவாடிய விரைவுச் செயற்பாட்டுப் படகுப் படைப்பிரிவினர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.



இதன்போது, களப்புப் பகுதியில் உள்ள புதர்க் காட்டில் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட 24 பொதிகள் சோதனையிடப்பட்டன. அவற்றில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 908 கிலோகிராம் பீடி இலைகள் காணப்பட்டுள்ளன.



கடற்படையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து கடத்தல்காரர்களால் குறித்த பீடி இலைகள் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் சுங்கத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



மேலும் 21ஆம் திகதியும் சட்டவிரோதமான 821 கிலோகிராம் பீடி இலைகள் புத்தளம் கங்கேவாடிய மற்றும் சேரக்குளிய கடற்கரைப் பகுதிகளில் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button