News

ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரி 50 இலட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் பிரசாரம் இன்று ஆரம்பமானது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரி 50 இலட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் பிரசாரம் இன்று (26) மிஹிந்தலை புனித பூமியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி மற்றும் மகா சங்கத்தினர் முதற்கட்டமாக மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து அவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்திருந்தார். எனினும், அந்தப் பொதுமன்னிப்பு சட்டரீதியாக செல்லாது என உயர் நீதிமன்றம் செப்டம்பர் 10ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.



இந்நிலையில், மீண்டும் சட்டரீதியான முறையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி கையெழுத்துகள் திரட்டப்பட்டு, மகாநாயக்க தேரர்கள் ஊடாக ஜனாதிபதியிடம் மனு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button