News

இலங்கைக்கு கொண்டு வர இருந்த 44 கிலோ ஹஷீஷ்  மற்றும் 13 கிலோ கொகேய்ன் கனடாவில் சிக்கியது

கனடாவின் ரொறன்டோ பீயர்சன் சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவரின் பயணப் பைகளில் இருந்து 44 கிலோகிராம் ஹஷீஷ் (hashish) மற்றும் 13 கிலோகிராம் கொகேன் ஆகிய போதைப்பொருட்களை கனடா எல்லை சேவைகள் முகவரகம் (CBSA) பறிமுதல் செய்துள்ளது. 

இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட பயணி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் கனடிய அரச உயர் காவல் துறையிடம் (RCMP) ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


CBSA வெளியிட்டுள்ள புகைப்படங்களில், மூன்று பயணப் பைகளுக்கு அருகில் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் பொதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


செப்டம்பர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த பறிமுதல் நடவடிக்கை தொடர்பான தகவலை செப்டம்பர் 23ஆம் திகதி CBSA பகிரங்கமாக அறிவித்தது.
சந்தேகநபரின் அடையாளம் அல்லது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்களை கனடிய அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button