News
VIDEO இணைப்பு > காலி – பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

காலி – பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Video > https://whatsapp.com/channel/0029VbDz8h8LtOj39BYihq14
காரொன்றில் வந்த குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தகது



