News

இலங்கை தேசிய ஹொக்கி அணியின் முன்னாள் தலைவர் ஜுனைத் ஜான் காலமானார்

இலங்கை தேசிய ஹொக்கி அணியின் முன்னாள் தலைவரும், சிறந்த ஹொக்கி வீரருமான ஜுனைத் மொஹமட் ஜான் அவர்கள் காலமான செய்தி மிகுந்த கவலையுடன் அறிவிக்கப்படுகிறது.

கண்டி மடவளையில் பிறந்த ஜுனைத் ஜான் அவர்கள், இலங்கை ஹொக்கி வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒரு சிறந்த தேசிய வீரரும் தலைவருமாவார். 1978ஆம் ஆண்டு இலங்கை தேசிய ஹொக்கி அணிக்கு தலைமை தாங்கி இந்தியா மற்றும் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றதுடன், பாங்கொக்கில் நடைபெற்ற 8ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அவரது மறைவு இலங்கை ஹொக்கி துறைக்கும், மடவளை மக்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பேரிழப்பாகும்.

குடும்ப விபரம்

அமரர் A. C. M. ஜுனைத் மற்றும் அமரர் ஹஸன் பானு ஆகியோரின் அன்பு மகனும்,

சலீமா ஹுசைன் அவர்களின் அன்புக் கணவரும்,

அமரர் ஸுல்ஹஜ் பீபி, அப்துல் ஸாஹிர், அமரர் மொஹமட் அயூப் மற்றும் ருக்மன் பீபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜஸ்மியா ஜான், ஜவ்ஹரா ஜான், ஜைஸா ஜான் மற்றும் சமீஹா ஜான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரிஹான் முஸத்திக், ஷரிஸ் உஸ்பர், இன்சாப் பரீத் மற்றும் நசிப் ஜிப்ரான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யமான், யஹ்யா, ஹலாஹ், நூர், ஈமான், ஆயத், ஹம்ஸா, யூசுப், மஹ்தி மற்றும் ஹாதி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

ஜனாஸா விபரம்

அன்னாரின் ஜனாஸா 2026 செப்டம்பர் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.

📍 முகவரி:
இல. 64/6, டி சில்வா வீதி, களுபோவில.

அன்னாரின் ஜனாஸாவில் கலந்து கொண்டு, அவருக்காக துஆச் செய்யுமாறு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அல்லாஹ் தஆலா அன்னாருடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து, அவர்மீது அளவற்ற ரஹ்மத் பொழிந்து, கப்ரை ஒளிமயமாக்கி, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்குவானாக.

அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்குவானாக.

ஆமீன் யா ரப்பல் ஆலமீன். 🤲

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: சகோதரர் கர்னல் அப்துல் ஸாஹிர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button