News

‘தித்வா’ சூறாவளி வீசி ஒரு வருடம்: இடிந்த பாடசாலை மதிலை இன்னும் சரிசெய்யவில்லை என பெற்றோர்கள் போராட்டம்

‘தித்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாவலப்பிட்டி ஸ்ரீ கவீஸ்வர வேளுவனாராம விகாரையின் பாதுகாப்பு மதிலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அதற்கு கீழே உள்ள அனுருத்த குமார தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் அன்றாட கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாகத் தெரிவித்து, இன்று (28) அப்பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் தலைவர்களும் கல்வி அதிகாரிகளும் இது குறித்து எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்றும், மழை நாட்களில் பாடசாலை மூடப்படுவதால் தங்கள் பிள்ளைகளை வீடுகளிலேயே வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க, ‘தித்தா’ சூறாவளி வீசி ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த இடத்தைப் பார்வையிட்டு, மிக விரைவில் சீரமைத்துத் தருவதாக உறுதியளித்த போதிலும், இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் பெய்த பலத்த மழை காரணமாக ஐந்து நாட்கள் மூடப்பட்டிருந்த இப்பாடசாலை, இன்று (28) மீண்டும் கற்றல் நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

– ரஞ்சித் ராஜபக்ஷ

Recent Articles

Back to top button