News

PickMe சாரதி போல் நடித்த ’யக்கல நாமலின்’ கூட்டாளிகள் இருவர் கைது – மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொழும்புக்கு சாரதியாக சென்று போதைப்பொருள் விநியோகித்து வந்தவர் சிக்கினார்

PickMe செயலியின் வாடகை முச்சக்கர வண்டிச் சாரதி போல் நடித்து, நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களை விநியோகித்து வந்த 38 வயதுடைய பிரதான சந்தேகநபரும், அவரது 27 வயது உதவியாளரும் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘யக்கல நாமல்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைப் பெற்று பல பகுதிகளுக்கு விநியோகித்து வருவதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

நாவலப்பிட்டி ஜயசுந்தர வீதியில் அமைந்துள்ள பிரதான சந்தேகநபரின் வீட்டைப் பொலிஸார் சோதனையிட்டபோது, அங்கிருந்த 2,450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், போதைப்பொருட்களைப் பல்வேறு இடங்களில் விநியோகிக்க உதவிய 27 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டிப் பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, பிரதான சந்தேகநபர் PickMe முச்சக்கர வண்டிச் சாரதி போல் நடித்து இக்கடத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொழும்புக்குச் சென்று போதைப்பொருட்களைப் பெற்று வந்து, அவற்றை விநியோகிப்பவர்களிடம் இவர் ஒப்படைத்து வந்துள்ளார். ஒவ்வொரு பயணத்திற்கும் PickMe வாடகைக் கட்டணத்திற்கு மேலதிகமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை இவர் பணமாகப் பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button