News

அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



இன்று (29) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



அவர் மேலும் கூறுகையில், சவூதி மன்னருக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.



இதற்காக சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் இதில் பங்கெடுத்துள்ளனர். இதன் மூலமும் சவூதி மன்னரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.



அத்துடன், ஜனாதிபதியின் கோரிக்கையையும், பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பங்களையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்றையும் சவூதி மன்னருக்குச் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.



மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.



இவ்வாறாக ராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்துக் நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button