News

அரச வாகனத்தை தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்திய ஏ.எச்.எம். பௌசி 6.6 மில்லியன் ரூபா நஷ்டஈடு செலுத்தி வாகனத்தின் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் முன் பக்கத்தில் மன்னிப்பு அறிக்கையைவெளியிடுமாறும் உத்தரவு

நெதர்லாந்து அரசாங்கத்தால் பேரிடர் மேலாண்மைக்காக வழங்கப்பட்ட வாகனத்தை தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இதற்காக அவர் ரூ. 6.6 மில்லியன் நஷ்டஈடு செலுத்த வேண்டும் என்றும், அந்த வாகனத்தின் புகைப்படத்துடன் கூடிய அரைப் பக்க மன்னிப்பு அறிக்கையை சிலுமின, சண்டே ஒப்சர்வர் மற்றும் தினகரன் ஆகிய பத்திரிகைகளின் முன்பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button