News
கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30) பிடியாணை

கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்ததுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டது.
மேலும், இந்த பிடியாணையை பொலிஸ் மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், ஞானசார தேரரை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.



