News

ஒரு லீட்டர் டீசலுக்கு 70 ரூபாய் மானியம்.. பெட்ரோலுக்கு நிவாரணம் இல்லை.. எரிபொருள் விலை விரைவில் அறிவிக்கப்படும்.. – அமைச்சர்

இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் ஒரு லீட்டர் டீசலுக்கு 70 ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த எரிபொருள் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுத்த போதிலும், இதற்காக இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) பெருமளவு நிதிப் சுமையை சுமக்க வேண்டியிருக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் டீசலுக்கு இவ்வாறு மானியம் வழங்கப்பட்டாலும், பெட்ரோலுக்கு எவ்வித மானியமும் வழங்க முடியாது என்றும் அமைச்சர் அநுர கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button