News
20 ஈரானிய கப்பல்கள் இலங்கை பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியிலேயே உள்ளன ; வெளிவிவகார அமைச்சு
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள 20 ஈரானிய கப்பல்கள் இலங்கை பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியிலேயேஅமைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்கள் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானிய கப்பல்கள் 20ல் பெரும்பான்மையானவை அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களாகும் எனவும் உணவுகளை வழங்குவது இலங்கை அரசாங்கம் அல்ல, பல்வேறு தனியார் நிறுவனங்களே ஆகும் என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
விநியோகங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள், தொடர்புடைய தடைகள் குறித்து விழிப்புணர்வுடன் உள்ளன என்று துறைமுக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.



