அமெரிக்க – ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் – மசகு எண்ணெயின் விலை உடனடியாகக் குறையும் ; ட்ரம்ப் அறிவிப்பு

மத்திய கிழக்கில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்கா – ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா மோதல் காரணமாகஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த வழியாக நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மசகு எண்ணெயின் விலை அதிகரித்து, பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக வளரும் மற்றும் ஏழை நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போர் முடிவுக்கு வந்ததும் மசகு எண்ணெயின் விலை உடனடியாகக் குறையும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்



