News
ஞானசார தேரர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது – வனப்பகுதி விகாரை ஒன்றில் ஒளிந்திருந்த நிலையில் இன்று கைது

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், நீதிமன்ற பிடியாணை நிலுவையில் இருந்த நிலையில், களுத்துறை, தினியாவல பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதி விகாரை ஒன்றில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



