News

கல்முனை வடக்கு வைத்தியசாலை ஹிஜாப் விவகார வழக்கில் மிப்ளால் மௌலவி உட்பட 6 பேர் சார்பில் இலவசமாக களமிறங்கும் சட்டத்தரணி சிராஸ் நூர்டீன்..

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் முஸ்லிம் சாதியர்களின் ஸ்காப் சம்பந்தமான பிரச்சினைக்காக குரல் கொடுத்த சகோதரர் மிப்ளால் மௌலவி உட்பட 6 நபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வைத்தியர் சுகுனன் அவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு இம்மாதம் எதிர்வரும் 12-ம் திகதி மன்றிற்கு வருகிறது.

இந்த விடயத்தில் மிப்லால் மௌலவி உள்ளிட்ட இந்த குழுவினருக்கு ஆதரவாக, இலவசமாக இந்த வழக்கில் ஆஜர் ஆகுவதற்கு சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் யூனுஸ் தலைமையிலான குழுவினர் தயாராக உள்ளனர்.

குறிப்பாக சமூகத்திற்காக குரல் கொடுக்கும் குழுவினருக்கு ஒரு சட்டத்தரணி குழுவினர் ஆதரவளிப்பது பாராட்டத்தக்கது; அதேபோன்று சமூகத்தில் உள்ள சகல தரப்பினரும் இது போன்ற விடயங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

Recent Articles

Back to top button