News

ஞானசார தேரருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை ; இன்றைய பாத யாத்திரை தொடக்கத்தில் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவிப்பு

மகா நாயக்க தேரர்களைத் தவிர நாட்டின் அனைத்துப் பிக்குமாரையும் சிறையில் அடைத்தாலும், ஞானசார தேரருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஞானசார தேரரை மட்டும் தாக்கவில்லை; இது பௌத்த சீவரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பௌத்த மதத்தின் மீதான தாக்குதலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்காக இன்று (14) நிட்டம்புவ நகரில் ஆரம்பமான “சுதந்திரப் பாத யாத்திரையின்” 5வது நாள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சீவரத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பதற்காக வாழ்க்கையில் எத்தகைய தியாகத்தையும் செய்து போராடத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாத யாத்திரை இன்று 5வது நாளாகவும் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அவர், நாளை இது கொழும்பை வந்தடையும் என்றார்.


பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக நாளை கொழும்பை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் மகா சங்கத்தினர் வருகை தரவுள்ளனர். அங்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், ஜனாதிபதி எடுக்கப் போகும் தீர்மானத்தைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button