News

கண்டி-மாத்தளை பிரதான வீதியில் அக்குறனை பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து


கண்டி-மாத்தளை பிரதான வீதியில் அக்குறனை 7 ஆம் கடடை பகுதியில் இடம்பெற்ற பல (சுமார் 10) வாகனங்கள் மோதிய பாரிய வீதி விபத்தையடுத்து, அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக அந்த  வீதியில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொங்க்ரீட் மிக்ஸர் லாரி ஒன்று பிரேக் இல்லாமல் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது மோதியதாலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இது வரை 4 பேர் உயிரிழந்து பலர் காயமும் அடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும்  எனவும் அஞ்சப்படுகிறது

அந்த வழியால் பயணிக்கும் சாரதிகள் தாமதத்தை எதிர்பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button