News

தெற்கில் நடந்த தேடுதல் வேட்டையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

மாத்தறை, தலல்ல, நாவோட்டுன்ன கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இன்று (24) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 475 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகையைக் கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குக் கிடைத்த நம்பகரமான தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட கூட்டு நடவடிக்கையின்போது, நாவோட்டுன்ன கடற்கரையில் இருந்த போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 10 சாக்குப்பைகளும், 11 பயணப் பைகளும் ஒரு டிங்கு படகும் கைப்பற்றப்பட்டன.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் நிபுணத்துவ உதவியுடன் இப்போதைப்பொருள் தொகை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில், அத்தொகுதியில் 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 275 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த போதைப்பொருள் தொகையும் டிங்கு படகும் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button