News
ஜனாதிபதி அநுர குமார திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் பொய் – ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும், இதுபோன்ற பொய்களை நம்ப வேண்டாம் எனவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ மூலங்கள் மூலம் உண்மையை உறுதிப்படுத்தாமல், சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



