News
உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன் என தேனாகப் பேசி நபர் ஒருவரை நம்பவைத்து அவரின் 1,455,000 ரூபா பணத்தை அபகரித்து மோசடி செய்த பெண் கைது

வாட்ஸ்அப் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 46 வயதுடைய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் வாட்ஸ்அப் மூலம் பெறுமதிமிக்க பரிசுப் பொதி தருவதாகக் கூறி, நபர் ஒருவரை நம்ப வைத்து அவரது கணக்கில் இருந்து ரூ. 1,455,000 தொகையை தனது வங்கிப் கணக்கில் வைப்பு செய்ய வைத்துள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டன.
வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண் நுஹேகொடை பகுதியைச் சேர்ந்தவராவார்.
வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



