News

சுற்றுலா வந்த 20 வயது பிரான்ஸ் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டதாக தெரிவித்து 21 வயது இளைஞன் கைது

தெற்கு ஜங்கிள் பீச் பகுதிக்கு சுற்றுலா வந்த 20 வயதுடைய பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.


ராகமவை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேக நபர், குறித்த பகுதிக்குச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, உனாட்டுவ சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நப அதிரடியாகக் கைது செய்தனர்.


பிரெஞ்சு சுற்றுலாப் பயணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேக நபரை ஹபரதுவ பொலிஸாரிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.


சகல நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்ட சந்தேக நபர் இன்று (நவம்பர் 1) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button