News

அமைச்சர் சுனில் வடகல மற்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார் ஜெயகொடி ஆகியோரின் சொத்துக்கள் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல மற்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார் ஜெயகொடி ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.



அவர்களின் சொத்துக்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் பின்னர் எழுந்த சில சந்தேகங்களை கவனத்தில் கொண்டு முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.



ஐந்து அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சருக்கு எதிராக சிவில் உரிமை செயற்பாட்டாளர் ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த முதற்கட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



குறிப்பிட்ட ஏனைய நபர்கள்: அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க வசந்த சமரசிங்க சுனில் ஹந்துந்நெத்தி மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோராவர்.



கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களுக்கும் தற்போது செய்யப்பட்ட பிரகடனங்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளைக் கவனத்தில் கொண்டே இந்த விரிவான விசாரணை நடத்தப்படுகிறது.



சிவில் உரிமை செயற்பாட்டாளரான ஜாமுனி சமந்த துஷார டி சில்வா என்பவரால் கடந்த வருட செப்டம்பர் மாதம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்த குற்றச்சாட்டு தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழு இவ்விசாரணையை ஆரம்பித்துள்ளது.



முதற்கட்ட விசாரணையில் சொத்துக்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக சில சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.



இருப்பினும் புதிதாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மேலதிக சொத்துக்கள் காரணமாக மேலதிக விசாரணைகள் தேவைப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button