News

விடாமுயற்சியின் வெற்றிப் பயணம் – அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த நக்கிள்ஸ் தமிழ் வித்தியாலயம்!



மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், வத்தேகம கல்வி வலயத்தைச் சேர்ந்த நக்கிள்ஸ் தமிழ் வித்தியாலயம், *2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.*

*2018 ஆம் ஆண்டு பங்கேற்பு விருதைப் பெற்ற இப்பாடசாலை, *2020 ஆம் ஆண்டு மூன்றாம்* இடத்தைப் பெற்று, படிப்படியாகத் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, *இம்முறை அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுப்  பெருமை சேர்த்துள்ளது.*

பாடசாலை *அதிபர் திரு. M சிவகுமார்* அவர்களின் தலைமையிலும், *உப அதிபர் திரு. D அருள்மொழித் தேவர், பிரதியதிபர் செல்வி T. ஏஞ்சலா* ஆகியோரின் வழிகாட்டுதலிலும், உற்பத்தித்திறன் *பொறுப்பாசிரியர் செல்வன் C. பிரகாஷ்*  தலைமையில்
உற்பத்தி திறன் குழு உறுப்பினர்களாகிய *திரு  S. சாந்த எந்தனி, திரு K. சற்குணரூபன்*
அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பும் ஒன்றிணைந்த உழைப்பும் இவ்வெற்றிக்குப் பெரும் அடித்தளமாக அமைந்தன.

இச்சாதனை நக்கிள்ஸ் தமிழ் வித்தியாலயத்தின் ஒட்டுமொத்தப் பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button