News

வீட்டில் மறைத்து வைத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்த 10 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் ஒருவர் கைது

10 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் சந்தேகநபர் ஒருவர் தலவத்துகொடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் பொரளைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரும், பாரிய போதைப்பொருள் கடத்தல் வியாபாரியுமான ‘தேவகே துசித சாமர’ அல்லது ‘வனாத்தே குடு திலான்’ என்பவரே இந்தப் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை வழிநடத்தியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள மேற்படி குற்றவாளிக்குச் சொந்தமான போதைப்பொருள் கையிருப்பை சந்தேகநபர் தனது வீட்டில் மறைத்து வைத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 290 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 2 கிலோ 946 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button