News
ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது – வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு ; கத்தார் பிரதமரிடம் ட்ரம்ப் தெரிவிப்பு

கத்தார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஈரான் போர் “முடிவுக்கு வந்துவிட்டது” என டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.
கத்தார் பிரதமரை வாஷிங்டனில் சந்தித்த பிறகு, ஈரான் உடனான போர் ராணுவ ரீதியாக “கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவது குறித்தும், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது தொடர்பாகவும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் சாதகமான விவாதங்கள் நடைபெற்றதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டுவர நேர்மறையான சூழல் உருவாகியுள்ளதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



