அனுராதபுரம் – A9 வீதியில் இன்று காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயம்

அனுராதபுரம், ரம்பேவ பகுதியில் ஏ9 வீதியில் இன்று (10) காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
.
இரு இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
.
இதன்போது, இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றுக்கு பின்னால் பயணித்த தனியார் பஸ் ஒன்றும், முன்னால் சென்ற பஸ்ஸின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதை மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதுடன், காயமடைந்த 18 முதல் 20 வரையான நபர்கள் அனுராதபுரம், வவுனியா மற்றும் மதவாச்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
.
விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
.
விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



