News

சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற இடத்தைப் பயன்படுத்துவதற்கு தடை

அநுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாயவிற்கு அருகில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற இடத்தைப் பயன்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.



இதன்படி, குறித்த பகுதிக்குள் வர்த்தகர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தின் எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டு எச்சரிக்கைப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன.



பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அப்பகுதியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், தொல்பொருள் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



இதேவேளை, நேற்று (12) குறித்த இடத்தில் பலாங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான குழுவினருக்கும், ராஜாங்கனய சத்தாரத்தன தேரர் தலைமையிலான பொதுமக்கள் குழுவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.



இந்த மோதலைத் தொடர்ந்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button