News

நாங்கள் உணவு விலைகளை கூட்டப் போகிறோம் என லாஃப் கேஸ் பாவித்து உணவு தயாரிக்கும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் அறிவித்தன.

லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் சிற்றுண்டிகள், ஃபிரைட் ரைஸ் மற்றும் கொத்து உள்ளிட்ட பிரபலமான உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எரிவாயு விலை உயர்விற்குப் பதிலடியாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
.
இந்த விலைத் திருத்தம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், அதிகரித்து வரும் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவை நம்பியுள்ள உணவகங்கள் சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாயாலும், ஃபிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலையை தலா 15 ரூபாயாலும் உயர்த்தவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் நிறுவனம் தனது எரிவாயு விலைகளை உயர்த்தியதைத் தொடர்ந்தே உணவக உரிமையாளர்கள் இந்த விலை மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர். புதிய விலைத் திருத்தத்தின் கீழ், 12.5 கிலோகிராம் நிறை கொண்ட வீட்டுப் பாவனை லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாயாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button