News

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமியை தேடிவந்த பொலிஸாருக்கு கிடைத்த அதிர்ச்சி… மலைக்குகை ஒன்றில் இரண்டு மாதக் குழந்தையுடன் சிறுமி மீட்பு, இருவரையும் பாதுகாப்பாக காப்பாற்றி வைத்திருந்த 23 வயது தந்தையும் பொலிஸாரால் கைது

நக்கிள்ஸ் மலைத்தொடரில் உள்ள தூரத்து குகை ஒன்றிற்குள், சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமி தனது இரண்டு மாதக் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
உடுதும்பர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மீமுரே பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் இந்தச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
.
இதன்போது, அப்பகுதியிலுள்ள கடை ஒன்றிலிருந்து வழமைக்கு மாறாக அதிகளவிலான அரிசி மற்றும் உணவுப் பொருட்களைத் தொடர்ச்சியாகக் கொள்வனவு செய்து வந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
.
அந்த இளைஞனைப் பின்தொடர்ந்து மக்கள் நடமாட்டமற்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற பொலிஸார், பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடப்பட்டிருந்த குகை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
.
அந்தக் குகைக்குள்ளேயே காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமியும், அவரது இரண்டு மாதப் பெண் குழந்தையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
.
எவ்வித மருத்துவ உதவிகளும் இன்றி அந்தக் குகைக்குள்ளேயே சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
.
குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பதற்குக் கித்துள் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.
மேலும், சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பாரம்பரிய மூலிகை மருந்துகளே தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சையாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
.
குழந்தையின் தந்தை என நம்பப்படும் 23 வயதுடைய குறித்த இளைஞன், கித்துள் பாகு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரம் ஒன்றிலேயே குழந்தையைக் குளிப்பாட்டியதாகப் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
.
இந்தச் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய குறித்த இளைஞனையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
.
மீட்கப்பட்ட சிறுமியும் குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button