எவ்வித கடன்களும் பெறாமல், வரி வருமானத்தை மட்டுமே பயன்படுத்தி 451 பில்லியன் ரூபாய் பெறுமதியான பாரிய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு 🔹

எவ்வித கடன்களும் பெறாமல், வரி வருமானத்தை மட்டுமே பயன்படுத்தி 451 பில்லியன் ரூபாய் பெறுமதியான பாரிய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
.
அரசாங்கம் வீதி உட்கட்டமைப்புத் துறையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகத் தனது சமூக வலைத்தளப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இந்தத் திட்டங்கள் முழுமையாக வரி வருமானத்தின் ஊடாகவே நிதியளிக்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
.
அத்துடன், இரண்டு முக்கிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்:
.
* குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலை: மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 4ஆம் கட்டத்தின் முதலாவது பகுதி.
.
* கஹதுடுவ – இங்கிரிய அதிவேக நெடுஞ்சாலை: உத்தேச ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டம்.



