மடவளையைச் சேர்ந்த மும்தாஸ் அலிக்கு சர்வதேச அரங்கில் இரட்டை வெற்றி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) கடந்த 2026 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற ICN WORLD NATURAL GAMES 2026 சர்வதேச இயற்கை உடற்கட்டழகுப் போட்டியில், மடவளையைச் சேர்ந்த மும்தாஸ் அலி இரண்டு பதக்கங்களை வென்று சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் அவர் பெற்றுக்கொண்ட வெற்றிகள்:
🥇 Men’s Physique – Rookie Category: தங்கப் பதக்கம் (Gold Medal).
🏆 PRO QUALIFIER: Men’s Physique Rookie பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், எதிர்வரும் போட்டிகளில் தொழில்முறை (PRO) பிரிவில் போட்டியிடுவதற்கான தகுதியையும் பெற்றுள்ளார்.
🥉 Men’s Fitness – Rookie Category: வெண்கலப் பதக்கம் (Bronze Medal).
ஒரே சர்வதேச போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றதுடன், PRO பிரிவில் களமிறங்குவதற்கான தகுதியையும் பெற்றுள்ள மும்தாஸ் அலியின் இந்தச் சாதனை மடவளைக்கு பெருமை சேர்த்துள்ளது.
உள்ளூர் மண்ணிலிருந்து சர்வதேச மேடைக்குச் சென்று தனது திறமையையும் கடின உழைப்பையும் நிரூபித்துள்ள மும்தாஸ் அலிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.












