News

வர்த்தக அமைச்சின் தலையீட்டைத் தொடர்ந்து 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 745 ரூபாவால் குறைக்கப்பட்டது.

வர்த்தக அமைச்சின் தலையீட்டைத் தொடர்ந்து 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 745 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
.
அதற்கமைய, 6,740 ரூபாவாக இருந்த 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 5,995 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
.
இதேவேளை, 2,720 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையும் 322 ரூபாவால் குறைக்கப்பட்டு 2,398 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
.
வர்த்தக அமைச்சின் தலையீட்டைத் தொடர்ந்தே இந்த விலைக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
.
இந்தப் புதிய விலைத் திருத்தமானது, லாஃப்ஸ் வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்குப் பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button