News

அம்பாறை பிரதேச விகாரை ஒன்றில் இ**ளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட தேரர் ஒருவருக்கு 14 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது

அம்பாறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட தேரர் விதிக்கப்பட்ட 14 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.


அந்தத் தண்டனையிலிருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி குற்றவாளியான தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை நிராகரித்த பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.


அம்பாறை மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகத் தமது நீதிமன்றம் தலையிடுவதற்குப் போதுமான காரணங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதால், குறித்த தண்டனையை உறுதிப்படுத்தி மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.


குற்றவாளியால் குறித்த இளம் பிக்கு தொடர்பாகத் தனக்குரித்தான அதிகாரம் மற்றும் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்தே இந்தக் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.


குற்றம் இழைக்கப்பட்ட வேளையில் பாதிக்கப்பட்ட
இளம் பிக்குவின் வயது 11 ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த குற்றச்சாட்டுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் தேரருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் 14 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 40,000 ரூபா அபராதமும் விதித்தது.


அது மாத்திரமன்றி, பாதிக்கப்பட்ட இளம் பிக்குவுக்கு 500,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


அந்தத் தண்டனையிலிருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி குறித்த தேரறினால் முன்னதாக இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button