News

கல்முனை பொலிஸ் பிரிவில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  சிக்கிய  இளைஞன்

 

  பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 27 கிராம் 140 மில்லிகிராம் ‘ஐஸ்’  போதைப்பொருளுடன் 30 வயதுடைய சந்தேக நபரொருவர் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (18) புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், கல்முனை புறநகர் பகுதியில் பொலிஸார்  சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக்கொண்டிருந்த நபரொருவரை வழிமறித்த பொலிஸார், அவரைச் சோதனைக்குட்படுத்தினர்.

இச்சோதனையின் போது, குறித்த நபரின் உடைமையிலிருந்து சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27 கிராம் 140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இதனையடுத்து சந்தேக நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவுக்கமைய, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அலியார் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (19) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්‍යවේදී
FAROOK SIHAN(SSHASSAN)
B. F .A

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button