News
மடவளையைச் சேர்ந்த A. L ஆஸிக் – நஸ்லா தம்பதிகளின் புதல்வி A. A சுஹா அகில இலங்கை ரீதியில் நடை பெற்ற போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்

(ஜே.எம்.ஹாபீஸ்)
இரண்டாம் தேசிய மொழி தொடர்பாக அகில இலங்கை ரீதியில் நடை பெற்ற போட்டிகளில் செல்வி ஏ.ஏ. சுஹா முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
இவர் மடவளையைச் சேர்ந்த ஏ.எல். ஆஸிக் – நஸ்லா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவர். இவர் கல்வி கற்கும் மாத்தறை இல்மா வித்தியாலயம் இப் போட்டியில் மொத்தம் 9 பரிசுகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் ‘இரண்டாம் தேசிய மொழி’ வாசிப்புப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். கல்வி அமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கிளையால் இசுருபாயாவில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இவருக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியை திருமதி ஜீ.காஞ்சனாவுடன் செல்வி ஏ.ஏ. சுஹா காணப்படுகிறார்.




