2025 வரை நாட்டுக்கு கிடைத்துள்ள நேரடி முதலீடுகள் பற்றிய விபரங்கள் (மில்லியன் டாலர்களில்) வெளியானது..

நாட்டிற்கு இதுவரை கிடைத்துள்ள நேரடி முதலீடுகள் தொடர்பில் 2027 வரவு செலவுத் திட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த உண்மைக்குப் புறம்பான கருத்துக்களுக்கு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாராளுமன்றச் சபை முதல்வரான பிமல் ரத்நாயக்க பாராளுமன்றித்தில் பதிலளித்து பேசினார்.
2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (20) உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
இந்த நாட்டில் கற்ற, எதனையும் தர்க்க ரீதியாகவும் உண்மைகளின் (facts) அடிப்படையிலும் நம்புகின்ற ஒரு தலைமுறை எமது நாட்டில் உள்ளது அவர்களுக்கு இவை புரியும்.எமக்குக் கிடைத்துள்ள நேரடி வெளிநாட்டு
முதலீடுகள் (FDIs)) குறைவகும்.
நேரடி வெளிநாட்டு முதலீடுகள்
2006 இல் 479 மில்லியன் டொலர்கள்
2007 இல் 603 மில்லியன் டொலர்கள்
2008 இல் 752 மில்லியன் டொலர்கள்
2009 இல் 404 மில்லியன் டொலர்கள்
2010 இல் 477 மில்லியன் டொலர்கள்
2011 இல் 955 மில்லியன் டொலர்கள்
2012 இல் 941 மில்லியன் டொலர்கள்
2013 இல் 932 மில்லியன் டொலர்கள்
2014 இல் 893 மில்லியன் டொலர்கள்
2015 இல் 679 மில்லியன் டொலர்கள்
2016 இல் 897 மில்லியன் டொலர்கள்
2017 இல் 1,370 மில்லியன் டொலர்கள் (இது அந்த ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை விற்றதன் மூலம் கிடைத்தது)
2018 இல் 1.6 பில்லியன் டொலர்கள்
2019 இல் 793 மில்லியன் டொலர்கள்
2020 இல் 434 மில்லியன் டொலர்கள்
2021 இல் 592 மில்லியன் டொலர்கள்
2022 இல் 884 மில்லியன் டொலர்கள்
2023 இல் 713 மில்லியன் டொலர்கள்
2024 இல் 759 மில்லியன் டொலர்கள்
2025 இல் 1.057 பில்லியன் டொலர்கள்
2026 ஆம் ஆண்டிற்கான தரவுகளை நாம் 2027 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கூறுவோம். ஆகவே இது மிகவும் தெளிவாக உள்ளது. அதனால் நான் சரியான இலக்கங்களைக் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்



