News

இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு ஆதரவை தெரிவிக்கும் சபை ஒத்தி வைப்பு பிரேரணை நீக்கம் …

மனிதாபிமான அடிப்படையில் இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பிரகாரம் எதிர்க்கட்சியின் பிரதி முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா அவர்களால் முன்வைக்கப்பட்டு, ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டு நாளைய தினம் (21) விவாதத்திற்கு எடுக்க தீர்மானிக்கப்பட்ட சபை ஒத்தி வைப்பு பிரேரணையை இன்று (20) நண்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஆளும் தரப்பால் திடிரென குறித்த பிரேரணை நாளைய ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

100 வீதம் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்புடைய, வேறு எந்தவித சட்ட அல்லது தொழிநுட்ப பிரச்சினைகளும் அமைந்து காணப்படாத இந்த பிரேரணையை அரசாங்கத்தின் பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட பெரும் அடியாகும்.

Recent Articles

Back to top button