News
இந்தியாவில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ வானிலை காரணமாக இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன..

இந்தியாவில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ வானிலை காரணமாக இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறினார்.
புறக்கோட்டை அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களை சங்கத்தினருடனான பேச்சுவார்த்தையை அடுத்த அவர் இந்த விடயத்தை கூறினார்.
காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள ஈரப்பதன் அதிகரிப்பு காரணமாக மிளகாயின் தரம் தொடர்பான சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர் மிளகாய் விலை அதிகரிப்பிற்கு இதுவே காரணம் என குறிப்பிட்டார்.
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவாது என குறிப்பிட்ட அமைச்சர் இந்தியாவில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ வானிலை காரணமாக இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறினார்.



