News

🔹உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்களில் உயிரிழந்த Amelie மற்றும் Daniel Linsey ஆகியோரின் நினைவாக அவர்களின் குடும்பத்தினர் இலங்கையின் 1990 Suwa Seriya அவசர அம்புலன்ஸ் சேவைக்கு நிதி திரட்டும் நலன்புரி நடவடிக்கையில்… 🔹

இலங்கையின் 1990 Suwa Seriya அவசர அம்புலன்ஸ் சேவைக்கு நிதி திரட்டும் நோக்கில், Amelie மற்றும் Daniel Linsey அறக்கட்டளையின் வருடாந்த நலன்புரி விருந்து நிகழ்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றது.
.
2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த Amelie மற்றும் Daniel Linsey ஆகியோரின் நினைவாக இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது.
.
நிகழ்வில் உரையாற்றிய அறக்கட்டளையின் நிறுவனர் David Linsey, அறக்கட்டளையின் முயற்சியால் ஏற்கனவே ஒரு அம்புலன்ஸ் வண்டி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
.
யாழ்ப்பாணம் பிராந்தியத்திற்கென மேலதிகமாக மற்றுமொரு அம்புலன்ஸ் வண்டியை வழங்குவதற்கான நிதி திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
.
தமது தனிப்பட்ட துயரத்தை கருணை மற்றும் சேவையின் அடையாளமாக மாற்றிய Linsey குடும்பத்தினரை, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் Nimal Senadheera பாராட்டினார்.
.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து வரும் இந்த அறக்கட்டளை, உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்தும் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.
.
லண்டனைச் சேர்ந்த பிரித்தானிய இளைஞர்களான 15 வயதுடைய Amelie Linsey மற்றும் அவரது 19 வயது சகோதரர் Daniel Linsey ஆகியோர், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு Shangri-La ஹோட்டலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
.
அவர்கள் தமது தந்தை Matthew Linsey உடன் இலங்கைக்குச் சுற்றுலா வந்திருந்த நிலையில், அவர்களது விடுமுறையின் இறுதி நாளன்று இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இத்தாக்குதலில் அவர்களது தந்தை உயிர் தப்பினார்.
.
அச்சமயம் Oxford பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த அவர்களது மூத்த சகோதரர் David Linsey, பின்னர் அவர்களின் நினைவாக Amelie மற்றும் Daniel Linsey அறக்கட்டளையை நிறுவி, இலங்கை சமூகங்களுக்கு ஆதரவளிப்பதுடன் நாட்டின் அவசர மருத்துவ வசதிகளையும் மேம்படுத்தி வருகின்றார்.
.
2019 டிசம்பர் மாதமளவில், இலங்கையின் சுகாதாரத் துறைக்காக David சுமார் 350,000 பவுண்டுகள் நிதியைத் திரட்டியிருந்தார். மேலும், இலங்கையின் ஒன்பது வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களைக் கொண்டு செல்லும் 100 தள்ளுபடுக்கைகளையும் இந்த அறக்கட்டளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button