News
ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியைத் தீர்மானித்த வாக்குகள் பொதுத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்காது ; மனோ கணேஷன்
ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியைத் தீர்மானித்த வாக்குகள் பொதுத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்காது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், கடந்த தேர்தலில் வாக்களிப்பதனை தவிர்த்த பலரும், ரணிலுக்கு வாக்களித்தவர்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கக் கூடும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.