News
பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன பேர்மிட், ஓய்வூதியம் என்பவற்றை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்வை வரி கொண்ட வாகன அனுமதி பத்திரங்கள் மற்றும் எம். பிக்களின் ஓய்வு ஊதியம் என்பவற்றை நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனை முன்வைபதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று (30) அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதியின் தேர்தல் கொள்கை பிரகடனத்துக்கமையை இந்த அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது